Tuesday, 26 April 2011

Shakthi News 26.04.2011

ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!

திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது. 

ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன. 

பொதுவாக இந்தத் திருமண வாழ்வு போரடிப்பதாகவே பதில் கிடைத்துள்ளது. வினோதம் இல்லை, தொடர்பாடலும் குறைந்துவிட்டது, காமம் கூட குறைந்து விட்டது என்பது தான் இவர்களின் பதிலாக இருந்தது. 

சிலர் தங்களது வாழ்க்கைத் துணையின் நிழலில் இருக்க வேண்டியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தங்களைச் சுற்றி ஒரு காலத்தில் வட்டமிட்ட பட்டாம் பூச்சியைக் கூட இப்போது காணவில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்தனர். 

கனடா வினிபெக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பெவர்லிபெஹ்ர் என்பவர்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முரண்பாடுகள்,துரோகம்,சுயநலம் என்பன தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே தெருவில் 7 வார கால இடைவெளியில் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்கள்!

இந்தப் படத்தில் காணப்படும் ஏழு இளம் தாய்மாரும் தென்வேல்ஸ் பகுதியின் மிஸ்கின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வசிக்கும் அயலவர்கள். 

ஒரே காலப்பகுதியில் கர்ப்பிணிகளாக இருந்தவர்கள். ஏழுவார கால இடைவெளியில் ஒரே ஆஸ்பத்திரியில் பிறந்தவை தான் இந்தக் குழந்தைகள். அனைத்தும். இப்போது இதேகால இடை வெளியில் தமது முதலாவது பிறந்தநாளுக்குத் தயாராகி வருகின்றனர்.. 

இவர்களுள் முதலாவது குழந்தையைப் பிரசவித்தவர் 34 வயதான நீலா எட்வர்ட் என்ற ஆசிரியை. இவருக்குப் பிறந்தது இரட்டைப் பெண் குழந்தைகள். 



தான் கர்ப்பிணியாக இருந்த போது அதே தெருவில் இன்னும் ஆறு பெண்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு தனது வீட்டில் விருந்தும் அளித்து மகிழ்ந்துள்ளார் இந்த ஆசிரியை. 

இன்னமும் அந்த நட்பும் சந்திப்பும் தொடருகின்றது. குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது இவர்கள் குழந்தைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றனர். 



குழந்தைகளோடு கூட்டமாக பார்க் செல்கிறார்கள் அல்லது எங்காவது சிற்றுண்டி அருந்தச் செல்கிறார்கள். குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை கூட்டாகக் கொண்டாடவும் இந்தத் தாய்மார் திட்டமிட்டு வருகின்றனர்.

பிரிட்டன் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் அழகிய பறவைகளின் தத்ரூபக் காட்சிகள்!

இவை பிரிட்டனில் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் பொதுவான பறவைகள். போல்சோவர் என்ற படப்பிடிப்பாளரால் மிக நீண்டகாலம் காத்திருந்து எடுக்கப்பட்ட பிரத்தியேகமான படங்களே இவை. 

39 வயதான இவர் கடந்த 20 வருடங்களாக பிரிட்டனின் வனவாழ் உயிரினங்களைப் படம் பிடித்து வருகின்றார். 

இவர் பறவைகள் தமது சொந்த விம்பத்தை தண்ணீரில் பார்த்து மகிழும் அல்லது விளையாடும் காட்சிகளை படம் பிடிக்கும் திட்டத்தை ஜனவரியில் தொடங்கினார். 

மிகவும் சிரமப்பட்டு பொறுமையைக் கையாண்டே இந்தப் படங்களை எடுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார். 





இந்தப் படங்களை எடுப்பதற்காக இவர் குளம் ஒன்றை தனது தோட்டத்தில் உருவாக்கி அதில் பறவைகள் வந்து நிற்கக் கூடியவாறு மரக் கிளைகளையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்தினார்.



அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. எதிர்ப்பார்த்தது போலவே தத்ரூபமான காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார்.




மீனிடம் உடலுறவு கொள்ளப் பார்த்ததாம் தவளை!

தண்ணீருக்கு அடியில் இருப்பது ஒரு தனி உலகம். அதில் என்னவெல்லாமோ நடக்கின்றது. 

இங்கே ஒரு அபூர்வமான காடசியைப் படமாக்கியுள்ளார் 75 வயதான டொனி பட்லர். 

டெவோனில் உள்ள தனது குளத்துக்குள் தான் இவர் இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார். இது கோல்ட் பிஷ் ரகத்தைச் சேர்ந்த மீன். 

தன்னிடமுள்ள மிகப்பெரிய மீன் இதுதான் என்கிறார் பட்லர். ஆனால் குளத்துக்குள் வந்த தவளை இந்த மீனோடு உறவு கொள்ளப் பார்த்ததாம். 

அது தான் இந்தக் காட்சியின் விஷேசம். பாவம் தவளையின் முயற்சி பலிக்கவில்லை. 

காரணம் படத்தை எடுத்தவுடன் தவளையையும், மீனையும் பிரித்துவிட்டார் பட்லர்.

பீரங்கிக்குள் இருந்து குண்டாகப் பாய்ந்த மனிதரின் பரிதாப நிலை! பார்வையாளர்கள் அதிர்ச்சி

பீரங்கிக்குள் இருந்து குண்டுதான் வெளியே வரும்.ஆனால் பீரங்கி வெடித்த போது குண்டுக்குப் பதிலாக மனிதன் வந்து விழுந்தால் எப்படியிருக்கும். 

மெய் சிலிர்க்க வைக்கும் இந்தக் காட்சியை இம்முறை ஈஸ்டர் வங்கி விடுமுறைத் தினத்தன்று காணும் துரதிஷ்டம் பலருக்கு ஏற்பட்டது. 

கென்ட் கவுண்டியில் உள்ள ஒரு திறந்த வெளி மைதானத்தில் தான் இந்த விபத்து இடம்பெற்றது. விடுமுறையை முன்னிட்டு ஒரு திகில் காட்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இந்த திகில் காட்சியில் பங்கேற்கும் ஸ்டன்ட் கலைஞர் பீரங்கிக்குள் இருந்து ஏவப்படுவது தான் விளையாட்டு. இவர் பீரங்கியிலிருந்து ஐம்பது அடி உயரத்துக்கு ஆகாயத்தை நோக்கி ஏவப்படுவார். எல்லாம் தயார் நிலையில் இருந்தது. 



நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். மேலே சென்று தன்னை பீரங்கியோடு இணைத்துக் கொண்டு எல்லாம் சரி சுட்டுத் தள்ளுங்கள் என்ற தோரணையில் அவரும் சைகை கொடுத்தார். 



ஆனால் அவரின் பிரதான பாதுகாப்பு இணைப்புக் கேபிள் அறுந்திருந்ததை துரதிஷ்டவசமாக எவரும் கவனிக்கவில்லை. பிறகு என்ன கேபிளை நம்பி ஏவப்பட்டவர் மேலே போன வேகத்தில் தலைகுப்புற வந்து கீழே விழுந்தார். 



எல்லாம் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. தயார் நிலையில் இருந்த முதல் உதவிப் பிரிவினர் அவரை நோக்கி ஓடினர். அவசர சேவையும் உடனடியாக வந்துவிட்டது. 



விமான அம்புலன்ஸ் உடனடியாக ஸதலத்துக்கு விரைந்து அவரை ஆஸபத்திரிக்கு எடுத்துச் சென்றது. இருந்தும் பலனில்லை. 



தலைகுப்புற வந்து விழுந்ததால் மோசமாக அடிபட்டிருந்தது. சற்று நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. 23 வயதான மெட் என்ற ஸ்டன்ட் கலைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிர் இழந்தார்.

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது குடிநீர் வைத்திருக்கும் பிளாஷ்டிக் கேன்கள் அதிக வெப்பமான சூழ்நிலையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவதால் அதில் இருக்கும் ஒருவித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது.

இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல்லும்போது காரில் இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பொதுவாக கார்களிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.

பின்னர் காருக்கு திரும்பி வந்ததும் அந்த குடிநீரையேப் பயன்படுத்துகிறார்கள். அதனால் காருக்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம் தண்ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது அவுஸ்திரேலியாவில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தான் கார்களில் வைக்கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண்ணீரை பெண்கள் அருந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் எவர் சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள் என்கிறது அந்த ஆய்வு அதோடு ஒரே பிளாஷ்க் பாட்டிலை சுத்தம் செய்து மீண்டும், மீண்டும் பாவிப்பதையும் விடுவதே நலம்.

மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். 

அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். 

ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. 

இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண்களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.

ரொமான்ஸுக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ? - இதோ சில சுவாரஸ்ய தகவல்கள்

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். 

சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி.

காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 

'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள். ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை, இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும்.

'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்சினையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். மனம் திறந்து வெளிப்படையாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் சந்தோசமாக வாழும் கணவன் - மனைவி உறவு மேம்பட, மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். 

கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும். மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். 

1-முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

2-இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

3-மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்சினைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள். 

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

ரத்தத்தை உறைய செய்யும் கருத்தடை மாத்திரைகள்

உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1980 ம் ஆண்டில் புதிய கருத்தடை மாத்திரைகளை தயாரித்தனர். 

அவை “மூன்றாம் தலைமுறை கருத்தடை மாத்திரை" என அழைக்கப்படுகிறது. இவை இதற்கு முன்பு பெண்களால் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளை விட ஆபத்தானது.

இது ரத்தத்தை உறைய செய்யக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நிபுணர்கள் 2 ஆய்வுகள் நடத்தினர். 

அதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. ரத்தம் உறைவதால் சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் தான் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

யாழில் பார்வை இழந்த இளம் பாடகன்!

உலகை காணும் பாக்கியத்தை  இழந்திருந்தாலும் உலகமே ஒரு கணம் திரும்பிப்பார்க்கக்கூடிய அளவுக்கு ஆண்டவன் குரல்வளத்தை கொடுத்துள்ளான் ஜெகதீசன் எனும்  27 வயதுடைய பார்வை இழந்த இளைஞனுக்கு. 

இவ்விளைஞன்  பிறந்து சில மாதங்களிலேயே இரண்டு கண்களின் பார்வைகளையும் இழந்துவிட்டான்.

யாழ். மீசாலையை சொந்த இடமாகக் கொண்ட  இவர் யாழ். சுன்னாகத்திலுள்ள விழிப்புலனற்றோரை பராமரிக்கும்வாழ்வகம் எனும் இல்லத்தில் 10 வயதில் வந்து சேர்ந்தார். 

அங்கிருந்தே க. பொ. த சாதாரண வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்தார். கல்வியில் பிரகாசிக்க விட்டாலும் பாடசாலைப் பருவத்திலேயே தன் குரல் வளத்தால் பல பரீசில்களையும் ஏன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதுடன் குரல் வளத்தால் இரசிகர்களையும் மகிழ்விப்பார்.

 



பார்வையை இழந்த போதிலும் குரல் வளத்தைக் கொண்டிருந்தும் ஜெகதீசினின் எதிர்காலம் தொடர்பாக எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை என்றே கூறலாம். 

ஜெகதீசன் கல்வியைவிட்டு பதினொரு வருடங்களாகின்றன ஆனால் அவனின் குரல் வளத்துக்கு ஏற்ற தளத்தை உருவாக்கி அவனின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதுவரை எந்த செயற்பாடும் செய்யப்படவில்லை.

 

எம்மவர் வெறுமனே ஜெகதீசனின் பாடலை இரசிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறார்கள். எனவே இந்த இளைஞனின் குரல் வளத்துக்கேற்றால்போல் அவனின் எதிர்காலமும் சுபிட்சமாய் அமைய இவ்விளைஞனுக்குரிய களத்தை அமைத்துக்கொடுக்கவேண்டியது எமது கடமையாகும்.



உலகம்  போற்றும் சிறந்த பாடகராக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம் என்று கூறும் ஜெகதீசனின்
அனுபவத்தையும், பாடல்களையும் அவரின் குரலிலேயே  கேட்போம்.





குறட்டை விடுவதை தவிர்க்கும் புதிய கருவி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
தூங்கும் போது ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி, ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவருக்கும் குறட்டை வருவது வழக்கம். குறட்டை அவரவர்களுக்கு தகுந்தபடி இருக்கும்.
உடல் பருமனானவர்களுக்கு பொதுவாக குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். ஒரு சிலர் விடும் குறட்டை சத்தத்தை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் தூங்க முடியாமல் வெளியில் செல்ல வேண்டி வரும்.
இந்த நிலையை போக்க பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இது தற்கால விஞ்ஞானத்தில் ஒரு புரட்சி என்று கருதப்படுகிறது.
லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் தீப்பெட்டி போன்று ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. அப்போது இதயத்திலிருந்து வெளியேறும் காற்று எந்த தடையும் இன்றி வெளியேறுகிறது.
இதனால் குறட்டை நின்று போகும். இதில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம் நாம் படுக்கைக்கு செல்லும் போது ஓன் செய்தும், எழுந்திருக்கும் போது ஓப் செய்தும் வைத்துக் கொள்ளலாம். இந்த சாதனம் தற்போது பரிசோதனையில் இருந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் தூக்கம் கெட்டு தவிக்கும் மக்கள் பயன் பெறுவர்.

பார்வையற்றோருக்கான விசேட கையடக்கத் தொலைபேசிகள் தயாரிப்பு

கைத்தொலைபேசிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெக்ஸ் நிறுவனம் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் பிரெய்லி என்ற புதிய வகை கைத்தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் சைலேந்திர ஜா கூறியதாவது: பார்வையற்ற‌ோர் எளிதில் கையாளும் வண்ணம், பிரெய்லி டாக்கிங் கீபேடுடன் கூடிய கைத்தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதன் கீபேடில் பெரிய பட்டன்கள் இருக்கும். இதை அழுத்தும் போது அந்த எண்ணிற்கான ஒலி கேட்கும்.
4 எஸ்.ஓ.எஸ் பட்டன்களும் கொண்ட இந்த கைத்தொலைபேசியில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால் அவசர உதவி தொடர்புக்கு அது செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தொலைபேசி இரட்டை சிம் கார்டை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி

கூகுள் வீடியோ சேவை மே மாதம் 13 -ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
மேலும் ஏப்ரல் 29 -முதல் கூகுள் வீடியோவில் தகவலிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும், யு டியூப் சேவையை அனைவரும் பயன்படுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்த வேழையில் யாஹூ நிறுவனமும் தனது பஸ் சேவையை ஏப்ரல் 21 -ஆம் திகதியுடன் முடித்துக்கொள்வதாக செய்தி வெளியிட்டுள்ளது.
twitter, facebook போன்ற சேவைகள் போன்றவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பு இதற்கு இல்லாதது ஒரு காரணமாக இருக்கும்.
கூகுளே பஸ் என்ன ஆக போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

குழந்தை அழுதால் அறியத்தரும் மென்பொருள்

குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய கைபேசியை வைத்தது விடுங்கள்.
குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு கைபேசிக்கு அந்த கைபேசியிலிருந்து அழைப்பு வந்து விடும்.
இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD. முதலில் இதை நம்முடைய கைபேசியில் பதிவு செய்து பின்னர் நம்முடைய இன்னொரு கைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.

அதிக அளவு இசைப் பாடல்களை கேட்டால் மன அழுத்தம் ஏற்படும்: ஆய்வுத் தகவல்

புத்தகங்கள் படிப்பதைக் காட்டிலும், எம்.பி3யில் இசை கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம், வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.
106 இளைஞர்கள் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 46 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு வார இறுதியிலும் இவர்கள் அழைக்கப்பட்டு எவ்வாறு பொழுது போக்கினர் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் எப்போதாவது எம்.பி3யில் இசை கேட்பவர்களைக் காட்டிலும் அதிகளவில் இசை கேட்பவர்களின் மன நிலை எட்டு மடங்கு அதிகமாக மன அழுத்தத்தில் உள்ளது.
இதே போல் எப்போதாவது புத்தகம் படிப்பவர்களுடன் அதிகளவில் புத்தகம் படிப்பவர்களை ஒப்பிடுகையில் 10ல் ஒருவருக்கு மன அழுத்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட முக்கிய விஞ்ஞானி பிரையன் பிரிமாக் கூறுகையில்,"மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க இசை கேட்கின்றனரா அல்லது அதிகளவில் இசை கேட்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறதா அல்லது இரண்டும் சேர்ந்தே இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகளை பட்டியலிடும் இணையம்

நாம் சாப்பிடும் உணவு ஒவ்வொரு பருவகாலத்திற்கும் மாறுபடுகிறது. சில உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் சில காலங்களில் கிடைப்பதில்லை.
அந்தந்த கால நேரத்தில் கிடைக்கும் சத்தான உணவு என்ன என்பதை நமக்கு பட்டியலிட்டு காட்டுகிறது ஒரு தளம்.
மாறி வரும் சூழ்நிலையால் ஒவ்வொரு காலநிலைகளிலும் சில இயற்கையான பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அப்படி கிடைக்கும் பொருட்களில் எதையெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். எந்த பொருட்கள் எல்லாம் நமக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து கொடுப்பதற்காக உள்ளது என்பதை நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றால் ஒவ்வொரு பருவகால நிலைக்கும் ஏற்ப நாம் சாப்பிட வேண்டிய உணவுப்பொருட்கள் என்னென்ன என்பதை துல்லியமாக கூறுகிறது.
நாம் எந்த மாதத்தில் இருக்கிறோம் என்பதையும் இந்த மாதத்தில் கிடைக்கூடிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி, ஒவ்வொரு காய்கறிகளிலும் கிடைக்கும் புரதச்சத்து மற்றும் அந்த குறிப்பிட்ட காய்கறியின் வரலாறு அது எந்த நாட்டில் அதிகமாக கிடைக்கும் இப்படி அனைத்து விதமான தகவல்களையும் நமக்கு கொடுக்கிறது.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஒரு இயற்கை மருத்துவர் என்னவெல்லாம் சாப்பிடச்சொல்வாரே அதை எல்லாம் இத்தளம் நமக்கு அறிவிக்கிறது.