இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இன்டெக்ஸ் டெக்னாலஜீஸ் இயக்குனர் சைலேந்திர ஜா கூறியதாவது: பார்வையற்றோர் எளிதில் கையாளும் வண்ணம், பிரெய்லி டாக்கிங் கீபேடுடன் கூடிய கைத்தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதன் கீபேடில் பெரிய பட்டன்கள் இருக்கும். இதை அழுத்தும் போது அந்த எண்ணிற்கான ஒலி கேட்கும்.
4 எஸ்.ஓ.எஸ் பட்டன்களும் கொண்ட இந்த கைத்தொலைபேசியில் ஏதாவது ஒரு பட்டனை அழுத்தினால் அவசர உதவி தொடர்புக்கு அது செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தொலைபேசி இரட்டை சிம் கார்டை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment