Monday, 25 April 2011

உலகின் மிகப் பெரிய அற்புத மலர்! (வீடியோ இணைப்பு)




பெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான்அரும் மலரைக் காணபதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர்.

உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீட்டர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது.


இந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம்.

அங்கு இவை சுமார் மூன்று மீட்டர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம்.

இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் இது வாடிப்போய்விடும்.


பெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன.

உலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன.

அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன

SimLanka: சுழல் மன்னன் முரளிதரன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, வி...

SimLanka: சுழல் மன்னன் முரளிதரன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, வி...

சுழல் மன்னன் முரளிதரன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, விளையாட்டு அனுபவங்கள் பற்றி சிறப்பு நேர்காணல்! (வீடியோ இணைப்பு)








இவன் மனிதனா? அரக்கனா? (வீடியோ இணைப்பு)

பாம்பு என்றால் பயப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஆனால் பாம்புக்கு இவனை கண்டால் கிலி பிடிக்குமாம் அப்படி என்ன என்கிறீர்களா? இந்தியாவை சேர்ந்த இவ் இளைஞன் பாம்புகளுடன் மிக சாதரணமாக பழகிறான்.


குறிந்த நபரின் உடல்களில் அங்கங்கே பாம்பு தீண்டுகின்றது ஆனால் ஒரு மாற்றம் இல்லை அவனில்… ஆனால் அவருக்கோ ரொம்ப பசி போல அதனால் பாம்பினை உயிரோடு ஏதோ முறுக்கு சாப்பிடுவது போல அலாதியாய் சாப்பிடுகிறார். இப்போ சொல்லுங்கள் இவரை கண்டால் பாம்புக்கு பயம் பிடிக்கும் தானே?

23 வருடங்களாக மூளையில் இருந்த துப்பாக்கி குண்டு (வீடியோ இணைப்பு)




சீனாவை சேர்ந்தவர் வாங்தியாங்கிங்(40). இவர் ஒரு விவசாயி. கடந்த 1988ம் ஆண்டு வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள ஷான்ஜியா கோயின் நகரில் தங்கியிருந்தார்.
ஒருநாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது தலையில் ஏதோ ஒன்று தாக்கியது போல் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தலைசுற்றலும், மயக்கமும் ஏற்பட்டது. அது போன்று 23 வருடங்கள் ஓடிவிட்டது. இந்நிலையில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். எனவே அவர் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரது தலைப்பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த துப்பாக்கி குண்டு ஓபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அந்த குண்டு சுமார் 2 செ.மீ நீளம் இருந்தது. தற்போது வாங்தியாங்கிங் நலமுடன் உள்ளார். அவரது தலையில் இந்த குண்டு எப்படி பாய்ந்தது? யார் துப்பாக்கியால் சுட்டார்கள்? என அவருக்கு தெரியவில்லை.

ஆனால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது கல் தன்னை தாக்கியது போன்று இருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த இடத்தின் அருகேயுள்ள ஒரு மலையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவன் தான் தன்னை துப்பாக்கியால் சுட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கார் உரிமையாளர்களே எச்சரிக்கை!

சொந்தமாகக் கார் வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்படியானால் லண்டனில் உள்ள குவீன் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறும் தகவல்களை அறிந்தே தீர வேண்டும்.

சொந்தமாக கார் வைத்திருக்கிறவர்கள் போதிய நேரம் இல்லாமையினாலோ, சோம்பேறித்தனத்தாலோ தங்களுடைய காரை தண்ணீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்வதில்லை. கார் சர்வீஸ�க்கு விடும்போது சுத்தமாவதே போதும் என்று இருந்துவிடுகின்றனர். ஆனால் ஆய்வு தெரிவிக்கும் தகவல்கள் வயிற்றைக் குமட்ட வைக்கிறது.

கார் ஸ்டீயரிங் வீலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, பொது கக்கூஸின் பேசினில் இருப்பதைவிட 900% அதிகமாக இருக்கிறதாம். உவ்வே...

காரில்போகும்போதுதான் நொறுக்குத்தீனி தின்பது வழக்கம். தெருவோர பஜ்ஜி கடையிலிருந்து வாங்கும் பண்டங்களையும் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டீயரிங் வீலில் எண்ணெயைத் தடவுகிறவர்களே அதிகம் (லண்டனிலுமா?).

பொது கக்கூஸில் ஒரு சதுர அங்குலத்துக்கு 80 கிருமிகள் இருந்தால் கார் ஸ்டீயரிங்கில் 720-க்கும் மேல் இருக்கிறதாம். (கிளவுஸ் போட்டுத்தான் இனி ஓட்ட வேண்டும்!)

கார் உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆண்டுக்கு ஒருமுறைதான் காரின் உள்ளே சுத்தம் செய்கின்றனர். காரில் சாப்பிடுவதால் மட்டும் அல்ல இருமுவதால், தும்முவதால், சளி ஒழுகும்போது மூக்கையும் துடைத்து கர்ச்சீப் இல்லாவிட்டால் கதவு, சீட், டாஷ் போர்டு, ஸ்டீயரிங் வீல், கூரை என்று எங்கு வேண்டுமானாலும் துடைப்பதால் கிருமிகள் பரவுகின்றன.

காரிலேயே டிக்கி என்று அழைக்கப்படும் அதன் பின் பகுதி இருக்கிறதே அதை தெரு குப்பைத்தொட்டி என்றே சொல்லிவிடலாம். அதை பெரும்பாலும் அடைத்தே வைத்திருப்பதால் கிருமிகள் ஆனந்தமாக அங்கே இனப்பெருக்கம் செய்து குடும்பம் நடத்துகின்றன. அதிகமில்லை, ஜென்டில்மென் - ஒன்றரை சதுர அங்குலத்துக்கு 1,000 பாக்டீரியாக்கள்தான் - இருக்கின்றனவாம்.

பாசிலஸ் செரியஸ், ஆர்த்ரோ பாக்டர் என்ற இருவகை பாக்டீரியாக்கள்தான் காரில் அதிகம் காணப்படுகின்றன. இது இருக்கும் பண்டத்தை சமைத்துச் சாப்பிட்டால் நான் ஸ்டாப் (வயிற்றுப் போக்கு) கொண்டாட்டம்தான்!

இதில் ஆர்த்ரோ பாக்டர் மண்ணில்தான் பெரும்பாலும் இருக்கும். கார் போகும்போது எழும் தூசியில் கலந்து காரில் வந்து விழும். மனிதர்களின் தோலிலும் இது இருக்கும்.

காரின் சுகாதாரம் ஒருபுறம் இருக்கட்டும், கார் பராமரிப்பு எப்படி என்றும் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

66% கார் சொந்தக்காரர்களுக்கு காரை வெளியே எடுக்கும்போது ஆயில், வாட்டர் லெவல் பார்க்க வேண்டும் என்ற நினைவே வராது.

கார் பஞ்சராகிவிட்டால் ஸ்டெப்னியைக் கொண்டு டயரை மாற்ற 66% பேருக்குத் தெரியாது.

காரில் காற்று குறைந்தால் காற்று நிரப்ப 30% பேருக்குத் தெரியாது.

காரில் வைப்பர் வேலை செய்யாவிட்டால் அதைப் பழுது நீக்க 50% பேருக்குத் தெரியாது.

நல்ல வேளை, காரை பாதுகாப்பாக ஓட்ட, சிக்னல் போட, ரிவர்ஸ் எடுக்க, ஓவர்டேக் செய்ய, ஆஃப் கிளட்சில் ஓட்ட எத்தனை பேருக்குத் தெரியும் என்று ஆய்வு செய்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும்.

இனி உங்கக் காரை தினமும் குளிப்பாட்டுவீர்களா, அல்லது குறைந்தபட்சம் அதன் முகத்தையும் வயிற்றையுமாவது சுத்தம் செய்வீர்களா?

Shakthi News 25.04.2011