தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது.
எந்த நாட்டி லிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே.
இந்த தேவையை நிறைவு செய்திட, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது. http://www.simplecountry codes.com என்ற முகவரியில் உள்ள தளம், அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது.
இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும்.
பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப் பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம்.
இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஓபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.
நாம் இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.
நாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.
இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை. இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.
இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில் பயன்படுத்தலாம். முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
இதில் உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யப்படும். தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.
பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும். இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர்.
இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. தரவிறக்கம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தரவிறக்க சுட்டி
இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக் கொள்வது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதே. பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர்.
முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதாரண செயல் ஆகும். ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள்.
ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள். ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும். இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள்.
உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள். இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும்.
நண்பர்களின் கணணியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணணியில் Limit பயனர் கணக்கில் பணியாற்றுவோம்.
அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது. சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும்.
பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும். வீடியோ மற்றும் ஓடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும்.
நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக 2011 ஜனவரியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபோது எகிப்திய நூதனசாலையில் இருந்து திருடப்பட்ட பழம்பெரும் கலைப் பெருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
எகிப்திய நகர ஸ்டேஷன் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பேக்கிற்குள் இவை காணப்பட்டன.
எகிப்தை ஆண்ட பண்டைய மன்னன் ஒருவரின் தங்கத்தினாலான சிலை,மேலும் மூன்று பாரோ ஆட்சிகால கலைப் பொருட்கள் என்பனவே திருடப்பட்டிருந்தன.
செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது.
இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.
இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொள்ள முடியும்.
இருந்தாலும் இணையப் பாவணையாளர்கள் இதை ஒரு திருட்டாகவே முத்திரை குத்தியுள்ளனர் என்று உள்ளூர் பத்திரிகையொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செக் குடியரசின் தலைநகரில் இவ்வாறான நிகழ்வுகளின் போது வருகை தரும் தலைவர்கள் பலருக்கு இது போன்ற பல பேனைகள் நினைவுச் சின்னங்களாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல் எமது ஜனாதிபதியும் அதை எடுத்துக் கொண்டதில் எந்தத் தப்பும் கிடையாது என்று செக் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாம் மேஜிக் சோ பலவற்றை நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி, இணையம் வாயிலாகவோ பார்த்திருக்க முடியும்.
அந்த காட்சிகளில் நாம் பார்த்த பலவற்றையே மீண்டும் மீண்டும் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக தாங்கள் ஏற்கனவே செய்து வைத்த பொருட்களைக் கொண்டு ஒரே விதான சில மேஜிக்குகளைப் பல மேடைகளில் பாத்திருக்க முடியும்.
ஆனால், இந்தக் காணொளியில் இருக்கும் மேஜிக்கை நீங்கள் பார்த்தால், இது சாத்தியம் தானா என எண்ணுவீர்கள். மேலும், இதில் ஒரு வித்தியாசத்தை உணருவீர்கள்.
எமது சினிமாவில் பாடல் காட்சிகளின் போது கதாநாயகி, கதாநாயகர்கள் சொற்ப நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு நடனமாடுவதைப் பார்த்திருப்போம். அதில் எதுவுமே உடனடியாக மாற்றப்படுவதில்லை.
இங்குள்ள காணொளியில் நம் கண்முன்னே நொடிப் பொழுதில் உடை மாற்றிக் கொள்கிறார்கள். அதிலும், இறுதியாக உடை மாற்றும் காட்சி மிக வியப்பில் ஆழ்த்தக் கூடியதாகவுள்ளது.
கூகுள் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து இம்மாதம் நான்காம் திகதி பதவி விலகிய எரிக் ஸ்க்மிட் அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் என்ற புதிய பதவியின் மூலம் வருடாந்தம் 1.25 மில்லியன் டொலர்களை சம்பளமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் இவருக்கு 6 மில்லியன் டொலர்களை போனஸ் கொடுப்பனவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூகுள் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் நாணயமாற்று ஆணைக்குழுவுக்குத் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோர்வேயின் ஆக்டிக் கடல் பிரதேசத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்று ஆபத்தில் மாட்டிக்கொண்ட மூதாட்டி தக்க சமயத்தில் மீட்பாளர்களால் காப்பாற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பிரிட் ஜெனட் றிச்சர்ட்ஸன் என்ற 73 வயதுப் பெண்ணே ஆபத்தில் மாட்டிக்கொண்டார். இவர் தனது கணவனோடு பயணம் செய்த ஆடம்பரக் கப்பலில் இருந்து தவறி 3 பாகை செல்சியஸ் மட்டுமே உஷ்ண அளவு கொண்ட உறை நிலை கடலில் விழுந்தார்.
தக்க சமயத்தில் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். 78 வயதான கணவர் ஜோர்ஜ் கடும் அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார்.
இந்தக் கடல் பயணத்தின்போது பிரிட் ஜெனட்டுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக துணை மருத்துவப் பிரிவினர் கப்பலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இவரை ஒரு ஸ்டெச்சரில் கிடத்தி மருத்துவப் படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பதற்றத்தில் ஸ்டெச்சரில் இருந்து தவறி கீழே கடலில் விழுந்துவிட்டார். உடனடியாக மீட்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து ஸ்தலத்துக்கு வந்து இவரைக் கடலில் இருந்து மீட்டெடுத்தனர். கடும் அலைகளுக்கு மத்தியில் எட்டு நிமிடங்களுக்குள் இவரை கடலில் இருந்து மீட்பாளர்கள் மீட்டெடுத்தனர்.
அங்கிருந்து விமானம் மூலம் இவர் பிரிட்டனின் கம்பர்லென் மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பொதுவாக திமிங்கிலங்கள் ஆபத்தானவை. ஆனால் பசுபிக் கடல் பிராந்தியத்தில் காணப்படும் இந்த சாம்பல்நிற திமிங்கிலங்கள் மனிதர்களோடு மிகவும் நட்பாகப் பழகுகின்றன.
கடலில் உல்லாசப் பயணிகளை இவை முத்தமிடவும் செய்கின்றன.
இந்த இராட்சத வகை திமிங்கிலங்கள் உல்லாசப் பயணிகளின் படகுகளைக் கண்டால் அவற்றை நெருங்கி வந்து மனிதர்களோடு அன்புடன் பழகுகின்றன.
மனிதர்களோடு தேடிவந்து நெருங்கிப் பழகும் இந்த இராட்சத திமிங்கிலம் சுமார் 40 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நீளம் சுமார் 40 அடிகள்.
இதன் உடல் முகம் என எல்லாப் பகுதிகளையும் எந்த அச்சமும் இன்றி மனிதர்கள் தொட்டுப் பார்க்கலாம். தடவியும் கொடுக்கலாம். மெக்ஸிகோவின் மேற்குக் கரையை அண்டிய பகுதியில் தான் இந்த அதிசயம் நடக்கின்றது.
இந்த சாம்பல் நிறத் திமிங்கிலங்களோடு விளையாட தற்போது உலகம் முழுவதும் இருந்து உல்லாசப் பயணிகள் குடும்பத்தோடு இந்தப் பகுதிக்கு விஜயம் செய்கின்றனர்.
மெக்ஸிகோவின் சென் இக்னாஸியோ குடாப் பகுதியிலேயே இவை காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு இனப் பெருக்கத்துக்காக புலம் பெயரும் உயிரினம் என்று கூறப்படுகின்றது.
உலகில் மனிதனோடு மிகவும் நெருங்கி நட்புறவு கொள்ளும் ஒரே வகை திமிங்கிலம் இதுதான்.
சாதனைகள் என்பது பலரகம் ஒவ்வொன்றும் ஒருரகம் …இதுவும் ஒரு வித்தியாசமாக சாதனைதான்.
துருக்கியைச் சேர்ந்த Mohamed Yilmaz என்ற இளைஞர் ஒரு கோப்பை பாலினை மூக்கினூடாக உறிஞ்சி, உறிஞ்சப்பட்ட பாலினை கண்ணினூடாக 2 மீற்றர் 70 சென்றி மீற்றர் தூரத்திற்கு பீறிட்டுப்பாய்ச்சி உலக சாதனை புரிந்துள்ளார்.