Tuesday, 26 April 2011

Shakthi News 26.04.2011

ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!

திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது. 

ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன. 

பொதுவாக இந்தத் திருமண வாழ்வு போரடிப்பதாகவே பதில் கிடைத்துள்ளது. வினோதம் இல்லை, தொடர்பாடலும் குறைந்துவிட்டது, காமம் கூட குறைந்து விட்டது என்பது தான் இவர்களின் பதிலாக இருந்தது. 

சிலர் தங்களது வாழ்க்கைத் துணையின் நிழலில் இருக்க வேண்டியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தங்களைச் சுற்றி ஒரு காலத்தில் வட்டமிட்ட பட்டாம் பூச்சியைக் கூட இப்போது காணவில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்தனர். 

கனடா வினிபெக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பெவர்லிபெஹ்ர் என்பவர்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முரண்பாடுகள்,துரோகம்,சுயநலம் என்பன தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே தெருவில் 7 வார கால இடைவெளியில் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்கள்!

இந்தப் படத்தில் காணப்படும் ஏழு இளம் தாய்மாரும் தென்வேல்ஸ் பகுதியின் மிஸ்கின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

இவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வசிக்கும் அயலவர்கள். 

ஒரே காலப்பகுதியில் கர்ப்பிணிகளாக இருந்தவர்கள். ஏழுவார கால இடைவெளியில் ஒரே ஆஸ்பத்திரியில் பிறந்தவை தான் இந்தக் குழந்தைகள். அனைத்தும். இப்போது இதேகால இடை வெளியில் தமது முதலாவது பிறந்தநாளுக்குத் தயாராகி வருகின்றனர்.. 

இவர்களுள் முதலாவது குழந்தையைப் பிரசவித்தவர் 34 வயதான நீலா எட்வர்ட் என்ற ஆசிரியை. இவருக்குப் பிறந்தது இரட்டைப் பெண் குழந்தைகள். 



தான் கர்ப்பிணியாக இருந்த போது அதே தெருவில் இன்னும் ஆறு பெண்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு தனது வீட்டில் விருந்தும் அளித்து மகிழ்ந்துள்ளார் இந்த ஆசிரியை. 

இன்னமும் அந்த நட்பும் சந்திப்பும் தொடருகின்றது. குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது இவர்கள் குழந்தைகள் சகிதம் சந்தித்துக் கொள்கின்றனர். 



குழந்தைகளோடு கூட்டமாக பார்க் செல்கிறார்கள் அல்லது எங்காவது சிற்றுண்டி அருந்தச் செல்கிறார்கள். குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை கூட்டாகக் கொண்டாடவும் இந்தத் தாய்மார் திட்டமிட்டு வருகின்றனர்.

பிரிட்டன் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் அழகிய பறவைகளின் தத்ரூபக் காட்சிகள்!

இவை பிரிட்டனில் வீட்டுத் தோட்டங்களில் காணப்படும் பொதுவான பறவைகள். போல்சோவர் என்ற படப்பிடிப்பாளரால் மிக நீண்டகாலம் காத்திருந்து எடுக்கப்பட்ட பிரத்தியேகமான படங்களே இவை. 

39 வயதான இவர் கடந்த 20 வருடங்களாக பிரிட்டனின் வனவாழ் உயிரினங்களைப் படம் பிடித்து வருகின்றார். 

இவர் பறவைகள் தமது சொந்த விம்பத்தை தண்ணீரில் பார்த்து மகிழும் அல்லது விளையாடும் காட்சிகளை படம் பிடிக்கும் திட்டத்தை ஜனவரியில் தொடங்கினார். 

மிகவும் சிரமப்பட்டு பொறுமையைக் கையாண்டே இந்தப் படங்களை எடுக்க வேண்டியிருந்ததாக அவர் கூறினார். 





இந்தப் படங்களை எடுப்பதற்காக இவர் குளம் ஒன்றை தனது தோட்டத்தில் உருவாக்கி அதில் பறவைகள் வந்து நிற்கக் கூடியவாறு மரக் கிளைகளையும் மற்ற வசதிகளையும் ஏற்படுத்தினார்.



அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. எதிர்ப்பார்த்தது போலவே தத்ரூபமான காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார்.




மீனிடம் உடலுறவு கொள்ளப் பார்த்ததாம் தவளை!

தண்ணீருக்கு அடியில் இருப்பது ஒரு தனி உலகம். அதில் என்னவெல்லாமோ நடக்கின்றது. 

இங்கே ஒரு அபூர்வமான காடசியைப் படமாக்கியுள்ளார் 75 வயதான டொனி பட்லர். 

டெவோனில் உள்ள தனது குளத்துக்குள் தான் இவர் இந்தக் காட்சியைப் படம் பிடித்துள்ளார். இது கோல்ட் பிஷ் ரகத்தைச் சேர்ந்த மீன். 

தன்னிடமுள்ள மிகப்பெரிய மீன் இதுதான் என்கிறார் பட்லர். ஆனால் குளத்துக்குள் வந்த தவளை இந்த மீனோடு உறவு கொள்ளப் பார்த்ததாம். 

அது தான் இந்தக் காட்சியின் விஷேசம். பாவம் தவளையின் முயற்சி பலிக்கவில்லை. 

காரணம் படத்தை எடுத்தவுடன் தவளையையும், மீனையும் பிரித்துவிட்டார் பட்லர்.

பீரங்கிக்குள் இருந்து குண்டாகப் பாய்ந்த மனிதரின் பரிதாப நிலை! பார்வையாளர்கள் அதிர்ச்சி

பீரங்கிக்குள் இருந்து குண்டுதான் வெளியே வரும்.ஆனால் பீரங்கி வெடித்த போது குண்டுக்குப் பதிலாக மனிதன் வந்து விழுந்தால் எப்படியிருக்கும். 

மெய் சிலிர்க்க வைக்கும் இந்தக் காட்சியை இம்முறை ஈஸ்டர் வங்கி விடுமுறைத் தினத்தன்று காணும் துரதிஷ்டம் பலருக்கு ஏற்பட்டது. 

கென்ட் கவுண்டியில் உள்ள ஒரு திறந்த வெளி மைதானத்தில் தான் இந்த விபத்து இடம்பெற்றது. விடுமுறையை முன்னிட்டு ஒரு திகில் காட்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



இந்த திகில் காட்சியில் பங்கேற்கும் ஸ்டன்ட் கலைஞர் பீரங்கிக்குள் இருந்து ஏவப்படுவது தான் விளையாட்டு. இவர் பீரங்கியிலிருந்து ஐம்பது அடி உயரத்துக்கு ஆகாயத்தை நோக்கி ஏவப்படுவார். எல்லாம் தயார் நிலையில் இருந்தது. 



நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். மேலே சென்று தன்னை பீரங்கியோடு இணைத்துக் கொண்டு எல்லாம் சரி சுட்டுத் தள்ளுங்கள் என்ற தோரணையில் அவரும் சைகை கொடுத்தார். 



ஆனால் அவரின் பிரதான பாதுகாப்பு இணைப்புக் கேபிள் அறுந்திருந்ததை துரதிஷ்டவசமாக எவரும் கவனிக்கவில்லை. பிறகு என்ன கேபிளை நம்பி ஏவப்பட்டவர் மேலே போன வேகத்தில் தலைகுப்புற வந்து கீழே விழுந்தார். 



எல்லாம் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விட்டது. தயார் நிலையில் இருந்த முதல் உதவிப் பிரிவினர் அவரை நோக்கி ஓடினர். அவசர சேவையும் உடனடியாக வந்துவிட்டது. 



விமான அம்புலன்ஸ் உடனடியாக ஸதலத்துக்கு விரைந்து அவரை ஆஸபத்திரிக்கு எடுத்துச் சென்றது. இருந்தும் பலனில்லை. 



தலைகுப்புற வந்து விழுந்ததால் மோசமாக அடிபட்டிருந்தது. சற்று நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. 23 வயதான மெட் என்ற ஸ்டன்ட் கலைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிர் இழந்தார்.

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றான மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமான ஒரு விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

அதாவது குடிநீர் வைத்திருக்கும் பிளாஷ்டிக் கேன்கள் அதிக வெப்பமான சூழ்நிலையில் இருக்கும் போது, அந்த பிளாஸ்டிக் உருகுவதால் அதில் இருக்கும் ஒருவித ரசாயனம் தண்ணீரில் கலக்கிறது.

இந்த ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தோற்றுவிக்கும் அபாயம் கொண்டதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக காரில் வேலைக்கோ, கடைகளுக்கோ செல்லும்போது காரில் இருக்கும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பொதுவாக கார்களிலேயே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.

பின்னர் காருக்கு திரும்பி வந்ததும் அந்த குடிநீரையேப் பயன்படுத்துகிறார்கள். அதனால் காருக்குள் உருவாகும் வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக் மிக லேசாக உருகுவதால் அதில் இருந்து டாக்சின் என்ற ரசாயனம் தண்ணீருடன் கலக்கிறது. அந்த நீரைப் பருகும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தற்போது அவுஸ்திரேலியாவில் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதைப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தான் கார்களில் வைக்கப்படும் குடிநீரை அதிகமாக குடிக்கும் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், டாக்சின் என்ற ரசாயனத்திற்கு மார்பக புற்றுநோயைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே காருக்குள் வைத்திருக்கும் தண்ணீரை பெண்கள் அருந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் எவர் சில்வர் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள் என்கிறது அந்த ஆய்வு அதோடு ஒரே பிளாஷ்க் பாட்டிலை சுத்தம் செய்து மீண்டும், மீண்டும் பாவிப்பதையும் விடுவதே நலம்.