Sunday, 24 April 2011

மனிதனோடு நெருங்கிப் பழகும் திமிங்கிலங்கள்! குவியும் சுற்றுலாப் பயணிகள் (பட இணைப்பு)

பொதுவாக திமிங்கிலங்கள் ஆபத்தானவை. ஆனால் பசுபிக் கடல் பிராந்தியத்தில் காணப்படும் இந்த சாம்பல்நிற திமிங்கிலங்கள் மனிதர்களோடு மிகவும் நட்பாகப் பழகுகின்றன. 

கடலில் உல்லாசப் பயணிகளை இவை முத்தமிடவும் செய்கின்றன. 

இந்த இராட்சத வகை திமிங்கிலங்கள் உல்லாசப் பயணிகளின் படகுகளைக் கண்டால் அவற்றை நெருங்கி வந்து மனிதர்களோடு அன்புடன் பழகுகின்றன. 



மனிதர்களோடு தேடிவந்து நெருங்கிப் பழகும் இந்த இராட்சத திமிங்கிலம் சுமார் 40 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நீளம் சுமார் 40 அடிகள். 

இதன் உடல் முகம் என எல்லாப் பகுதிகளையும் எந்த அச்சமும் இன்றி மனிதர்கள் தொட்டுப் பார்க்கலாம். தடவியும் கொடுக்கலாம். மெக்ஸிகோவின் மேற்குக் கரையை அண்டிய பகுதியில் தான் இந்த அதிசயம் நடக்கின்றது. 



இந்த சாம்பல் நிறத் திமிங்கிலங்களோடு விளையாட தற்போது உலகம் முழுவதும் இருந்து உல்லாசப் பயணிகள் குடும்பத்தோடு இந்தப் பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். 

மெக்ஸிகோவின் சென் இக்னாஸியோ குடாப் பகுதியிலேயே இவை காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்தப் பகுதிக்கு இனப் பெருக்கத்துக்காக புலம் பெயரும் உயிரினம் என்று கூறப்படுகின்றது.

உலகில் மனிதனோடு மிகவும் நெருங்கி நட்புறவு கொள்ளும் ஒரே வகை திமிங்கிலம் இதுதான்.

No comments:

Post a Comment