பிரிட் ஜெனட் றிச்சர்ட்ஸன் என்ற 73 வயதுப் பெண்ணே ஆபத்தில் மாட்டிக்கொண்டார். இவர் தனது கணவனோடு பயணம் செய்த ஆடம்பரக் கப்பலில் இருந்து தவறி 3 பாகை செல்சியஸ் மட்டுமே உஷ்ண அளவு கொண்ட உறை நிலை கடலில் விழுந்தார்.
தக்க சமயத்தில் மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட இவர் தற்போது பிரிட்டிஷ் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார். 78 வயதான கணவர் ஜோர்ஜ் கடும் அதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார்.
இந்தக் கடல் பயணத்தின்போது பிரிட் ஜெனட்டுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டது. உடனடியாக துணை மருத்துவப் பிரிவினர் கப்பலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இவரை ஒரு ஸ்டெச்சரில் கிடத்தி மருத்துவப் படகுக்கு மாற்றும் போது ஏற்பட்ட பதற்றத்தில் ஸ்டெச்சரில் இருந்து தவறி கீழே கடலில் விழுந்துவிட்டார். உடனடியாக மீட்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து ஸ்தலத்துக்கு வந்து இவரைக் கடலில் இருந்து மீட்டெடுத்தனர். கடும் அலைகளுக்கு மத்தியில் எட்டு நிமிடங்களுக்குள் இவரை கடலில் இருந்து மீட்பாளர்கள் மீட்டெடுத்தனர்.
அங்கிருந்து விமானம் மூலம் இவர் பிரிட்டனின் கம்பர்லென் மருத்து மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment