Sunday, 24 April 2011

கூகுள் நிறைவேற்றுப் பணிப்பாளரின் மலைக்க வைக்கும் சம்பளம்!

கூகுள் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து இம்மாதம் நான்காம் திகதி பதவி விலகிய எரிக் ஸ்க்மிட் அந்த நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் என்ற புதிய பதவியின் மூலம் வருடாந்தம் 1.25 மில்லியன் டொலர்களை சம்பளமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2011ம் ஆண்டில் இவருக்கு 6 மில்லியன் டொலர்களை போனஸ் கொடுப்பனவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூகுள் நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தை மற்றும் நாணயமாற்று ஆணைக்குழுவுக்குத் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment