Tuesday, 26 April 2011

சுறாவுடன் விளையாட்டில் ஈடுபட்ட வாலிபர்: விபத்தில் முடிந்த பரிதாபம்

பல நேரங்களில் விளையாட்டு கூட விபரீதமாகி விடுவதுண்டு. அந்த ரகத்தை சேர்ந்தது தான் சமீபத்தில் சிட்னியில் நடந்த ஒரு சம்பவம்.
சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள கார்நர்வோன் கடல் பகுதியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தனது அருகில் சுமார் ஒரு மீற்றர் நீளமுள்ள சுறா ஒன்று வருவதைப் பார்த்த அவருக்கு பீதி. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், திடீரென சுறாவுடன் விளையாட துவங்கினார்.
கடலில் மிதந்த இறந்த மீனை எடுத்து சுறாவை நோக்கி வீசினார். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து போட்டார். மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.
பொறுமை இழந்த சுறா இளைஞர் மீது பாய முயன்றது. உடனே இளைஞர் சுறாவின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சுறாவின் குறி தப்பவில்லை. இளைஞரின் காலை கவ்வியது.
அதன் பற்கள் ஆழமாக பதிந்ததால் காலில் ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று அலறியடித்து வெளியே வந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மரண பீதியில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

No comments:

Post a Comment