Tuesday, 26 April 2011

அழையா விருந்தாளியாக வீட்டுக்குள் நுழைந்த முதலை!

அழையா விருந்தாளியாக வீட்டுக்கு மனிதர்கள் வந்தாலே கடுப்பாகிவிடும். அதுவே ஒரு இராட்சத முதலையாக இருந்தால் எப்படி இருக்கும்.

அதுவும் வீட்டில் விருந்தாளிகளுக்கான படுக்கை அறையில் முதலை புகுந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமா? அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அலக்ஸிஸ் டன்பாரின் வீட்டில் தான் இந்த அழையா விருந்தாளி நுழைந்தார்.

இந்த முதலை அறு அடி நீளமானது. இந்த முதலை அந்த படுக்கை அறையின் இணைந்த குளியல் அறைக்கும் விசிட் அடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

வீட்டைப் பூட்டிவைத்து விட்டு விடுமுறை கழித்து வந்து பார்த்த போது தான் இந்த அதிர்ச்சி காத்திருந்தது. முதலை எப்படி வந்தது என்பது தெரியாது.

ஆனால் அந்த வீட்டில் அலக்ஸிஸ் டன்பாரின் பிள்ளைகள் போல் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பூனைகளைக் காணவில்லை. முதலையைக் கண்டதும் டன்பார் கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடிவிட்டார்.

பின்னர் அயலவர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வந்து முதலையை தூண்டில் போட்டு பிடித்து வெளியே இழுத்து வந்தனர்.

முதலை வெளியே கொண்டு வரப்பட்டதும் மறைந்திருந்து தமது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட பூனைகளும் தமது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தன .





No comments:

Post a Comment