சீன சிலந்தி குறித்து ஆய்வாளர்கள் விவரிக்கையில் மின்னும் தங்க நிறமான உறுதி மிக்க வலைப் பின்னல்களை உருவாக்கக் கூடியதாக பெரும் சிலந்தி வகைகள் உள்ளன. ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ள பெண் சிலந்தி கற்படிவம் 16 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினமாகும். இந்த சிலந்திக்கு "நெபிலியா ஜீராசிகா" என்பது விலங்கியல் பெயராகும். இதைப்பற்றி உயிரியல் இதழில் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அமெரிக்காவின் கனாஸ் பல்கலைகழகத்தை சார்ந்த பேராசிரியர் பால்செல்டன் கூறுகையில்,"உலகின் பெரும் பெண் சிலந்தியான நெபிலியா ஜீராசிகா உருவத்தில் பெரியது அல்ல. ஆனால் அதன் கால்கள் மிக நீளமானதாக இருக்கும். அந்தக் கால்கள் 15 செ.மீ வரை நீண்டு இருக்கும்" என்றார். தற்போதைய கால கட்டத்தில் நெபிலியா சிலந்தி இனங்கள் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் உள்ளன. மங்கோலியாவுக்கு உள்பகுதியில் ராட்சத சிலந்தி கற்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விசேட உருவம் பொருந்திய பெரும் சிலந்தி இனம் எப்படி அழிந்தது என்று இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. |
Thursday, 21 April 2011
உலகின் மிகப்பெரிய சிலந்தியின் கற்படிவம் கண்டுபிடிப்பு
Labels:
Technology
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment